ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசு விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயக்குமாரியின் விடுதலையானது சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வா ஆச்சிரமத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை ஜெயக்குமாரி கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

