Breaking
Sat. Dec 6th, 2025
தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என  ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களாகியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்றில்லாததால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன்.
தற்போது அதற்கான சூழ்நிலை உருவாகியிருப்பதால் நான் பொது வேட்பாளரைப் பலப்படுத்தி அவரது வெற்றிகாக உழைக்க முடிவெடுத்திருக்கிறேன்.
அரசிலிருந்து வெளியில் இருந்து வருபவர்களுக்கு பதவிகளும் அமைச்சுகளும் முன்னரிமையுடன் வழங்கப்படுவதைக் கொண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
நான் ஒரு பெண். என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் சிந்தித்து செயற்பட வேண்டும் எனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அறிவுரையையும் மீறியே தான் முடிவெடுத்துள்ளதாகவும் எதற்கும் தான் அஞ்சப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post