இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டு வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியின் போது விளம்பர அனுசரனையாளர்கள் தமிழ் மொழியை புறக்கணிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்; ஊடக துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் முறையிட்டுள்ளார்.
மேற்படி “ஹதவத்தின் சிறிலாங்கியோ” என்ற விளம்பர நாமம் சிங்களத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது தமிழில் எழுதப்படவில்லை. எனவே இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேரடியாக ஐ அலைவரிசையில் ஒளிப்பரப்பபட்டு வருகிறது. இந்த அலைவரிசையில் ஒளிபரப்படும் விளம்பரங்களில் தமிழ்; மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் உள்ளிட்;ட பகுதிகளிலிருந்து நேயர்களினால் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே அமைச்சரிடம் குறித்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.
இதேவேளை குறித்த அலைவரிசையில் உலக கிண்ணம் தொடர்பில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்படும் அரை மணிநேர நிகழ்ச்சியிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் இதன்போது அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் உலக கிண்ணத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ‘ஜய அரகமு மெவாரே” என்ற பாடல் இலங்கை அணி தோல்வி கண்ட பின்னரும் ஒளிப்பரப்பபட்டு வருகிறது .இது இலங்கை அணியை இழிவுப்படுத்தும செயலாகும்;.இதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்
இது தொடர்பில் பல தடவை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டு துறை பணிப்பாளர பாலித்த செனரத்திடம் முறையிட்ட போதும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் முன்வைத்த் கோரிக்கைகள்
அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக அமைச்சர் கயந்;த கருணாதிலக்க அவரிடம் உறுதியளித்துள்ளார். vk

