தர்கா நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினால் சிறு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
தர்கா நகர் பத்திராஜாகொட பகுதியின் ஊடாக உதைபந்தாட்டம் விளையாடி விட்டு சென்றுகொண்டிருந்த முஸ்லிம் வாலிபர்களுக்கும் சிங்கள வாலிபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பில் முடிந்துள்ளது.
அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார்
அதுதவிர அப்பிரதேச விகாரை மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மின்சாரம் தடைப்படதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தற்போதைய நிலைமையை அறிய சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது….
முஸ்லிம் வாலிபர்களுக்கும் அப்பிரதேச பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு சம்பவம் கைகலப்பில் முடிந்துள்ளதாகவும்,அபிரதேசத்தில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து பின்னர் வைத்தியாலைக்குகொண்டு செல்லப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடயாதாக கூறி இரு முஸ்லிம் இளைஞர்களை போலிசார் அழைத்து சென்றுள்ளதாக அங்கிருந்து செய்தி கிடைத்ததாகவும் இதனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மறுத்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மடவளை நியூசுக்கு தெரிவித்தார்.
தற்போது பிரதேச பாதுகாப்பை போலிசார் உறுதி செய்துள்ள நிலையில் துண்டிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் அப்பிரதேச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். (mn)

