Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், தலைமன்னார் கிராம பங்குதந்தை கிறிஸ்தவ பாதிரியார் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் முஜாஹிர்,

இம்முறை இப்பிரதேச மக்கள் மட்டுமின்றி அதிகமான பிரதேசங்களில் இன,மத வேறுபாடின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு, தமது பொன்னான வாக்குகளின் மூலம் மக்கள்  ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதற்கு காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இனமத வேறுபாடின்றி, மனித நேயத்திற்கு முக்கியத்துவமளித்து சேவை செய்வதனாலாகும். அதன் காரணமாகவே இந்த மக்கள் ஆணையை அமைச்சர் பெற்றுள்ளார் என்று கூறினார்.

பதிலுக்கு கருத்து தெரிவித்த பாதிரியார் அவர்கள்,

தாங்கள் மன்னார் மாவட்டத்தின் தவிசாளராக நியமிக்கப்பட்டமைக்கு எனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும்,  இப்பிரதேசத்தில் 12548 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேற்றுமையின்றி, பாகுபாடின்றி தங்களால் முடிந்த உதவிகளையும், ஒத்தாசையையும் வழங்க வேண்டும். சிறந்த சேவைகளையும், சீரான அபிவிருத்திகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு எமது ஆதரவை நிச்சயம் அளிப்போம் என்று கூறினார்.

இந்த சந்திப்பின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமன்னார் பிரதேச சபை உறுப்பினர் நயீம் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Post