Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தன்னுடன் சேர்ந்து போட்டியிட்ட அய்மன் குரூஸை,  தலைமன்னாரிலுள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் செய்து, தனது வெற்றிக்கு பாடுபட்ட வேட்பாளாராகிய அய்மன் குரூஸுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விஜயத்தின் போது, பொதுமக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளையும், அபிவிருத்தி சம்பந்தமான தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்,

அம்மக்கள் மத்தியில் பேசிய தவிசாளர்,

இப்பிரதேசமானது கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று பல் இனத்தவர்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். எனினும், கடந்த தேர்தலின் போது அனைத்து மக்களும் ஒன்றுபட்டு, அய்மன் குரூஸுக்கு தங்களது வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளீர்கள். அதற்குக்  காரணம் கட்சியின் தலைமைத்துவத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,

ஆகவே, எம் மீதும், எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வைத்து, நீங்கள் அளித்த வாக்குகள் ஒரு போதும் வீணாகமாட்டாது என்பதினை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். எந்த எதிர்பார்ப்பில் எங்களுக்கு வாக்களித்தீர்களோ அந்த எதிர்பார்ப்பினை நிச்சயம் செய்து தருவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதினை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Related Post