Breaking
Fri. Dec 5th, 2025
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த மாத இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய உள்ளனர்.
இதேவேளை,தாஜூதீனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லெப்டினன் யோசித ராஜபக்ச ஆகியோரின் மெய்ப்பாதுகாவலராக பத்து ஆண்டுகள் கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இந்த ஆறு சந்தேக நபர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

By

Related Post