திருகோணமலையில் 8000 மீற்றர் கொங்ரீட் வீதிகள்- அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தில் 8000 மீற்றர் கொங்ரீட் வீதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதியோதிக்கீட்டில் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதேச மக்களினால்,  அப்துல்லாஹ் மஹ்ரூபின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பெரும்பாலான மணல், கிரவல் வீதிகள் இத்திட்டத்தில் கொங்ரீட் வீதிகளாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.