Breaking
Fri. Dec 5th, 2025

இந்திய சினிமாத்துறையில் நம்பர் 1 ஆக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. உஸ்தாத் இசத் அவர்கள் கபாலி படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினி காந்த் அவர்களுக்கு நேரில் சந்தித்து தமிழ் மொழிப்பெயர்ப்பு குரான் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இறைவனின் வேதமான திருக்குர்ஆனை படிக்க தொடங்கி விட்டார் ஆன்மீகவாதியான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி காந்த் நடிக்கக்கூடாது என்று பாஜக, இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ரஜினி காந்த் அவர்கள் திருக்குர்ஆன் படிக்க தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

கோவை கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் திரு.ரஜினி காந்த் அவர்கள், எனது இஸ்லாமிய உறவுகள் என்று மனதார பேசினார்.

உலக சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸன், கேட் ஸ்டீவன்ஸ், கேசியஸ் கிளே, லாரன் பூத் ஆகிய உலக பிரபலங்களை ஈர்த்த திருக்குர்ஆன் இப்போதும் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் கைகளில் தவழ்கிறது.

இறைவன் திரு.ரஜினி காந்த் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என்றென்றும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக….

3

1

2

– எடிட்டர் அலாவுதீன் –

By

Related Post