Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லஹ் மஹ்ரூபின் அழைப்பின் பெயரில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி அவர்கள் நேற்று முன்தினம் (26) திருமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, நிலாவெளி, ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, மீனவர்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான  வாழ்வாதாரம், வீடமைப்பு மற்றும் மலசலகூட வசதிகள், வெளிச்ச வீடு, டைனமோ பயன்படுத்தி மீன்பிடி தொழில் ஈடுபடுவோரை தடுத்தல், வீதி அபிவிருத்தி, இறங்குதுறை அமைத்தல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் சிலவற்றுக்கு உடன் தீர்வும் எட்டப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

 

 

 

 

Related Post