Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம்  மாவட்ட அமைப்பாளர்  அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் புத்தளம்  மாவட்டத்தில் பத்து மினிதையல் தொழிற்பட்டறைகள் ஆரம்பிக்கப்பட்டதும், அவற்றில் சுமார் 200 மகளிர் பயிலுனராக இணைந்து கொண்டதும் யாவரும் அறிந்ததே.

அவர்களது குறிப்பிட்ட ஆறு மாத கால பயிற்சி நெறி நிறைவுக்கு வருவதை முன்னிட்டு, ஒவ்வொரு நிலையங்களிலும் பிரியாவிடை வைபவங்களும், கண்காட்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், புத்தளம், சேனைக்குடியிருப்பில் உள்ள பயிற்சி நிலையத்தில் (22) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அலி சப்ரி ரஹீம்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 

 

Related Post