நண்பர்கள் மூவரும் ஒரே விபத்தில் பலி – எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்….

எம்பிலிப்பிட்டிய-இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், மதிலில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.05 க்கு இடம்பெற்ற இந்த விபத்தில், 19 வயதான இளைஞர்கள் இருவரும் 21 வயதான இளைஞனுமே பலியாகியுள்ளனர். எம்பிலிப்பிட்டியிலிருந்து இரத்தினபுரியை நோக்கி பயணித்துகொண்டிருந்த போதே கல்வங்கு எனுமிடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.