நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு

வவுனதீவு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு (25) இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நிதியை கையளித்தார்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட இணைப்புச் செயலாளர் லோகநாதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.