Breaking
Sun. Dec 14th, 2025
நான்கு வகைகளிலான கறிகளுடன் 50 ரூபாவிற்கு சோற்றுப் பொதிகள் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் முதல் 50 ரூபாவிற்கு சோற்றுப் பொதிகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டமாக கொழும்பு நகரில் 15000 சோற்றுப் பொதிகள் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

50 ரூபாவிற்கு சோற்றுப் பொதியை விற்பனை செய்வதன் மூலம் உற்பத்தியாளர் 8 ரூபாவினை லாபமாக ஈட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post