Breaking
Sat. Dec 6th, 2025

-முர்ஷிட்-

நிந்தவூரின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது நிந்தவூரில் காணப்படும் உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள், வடிகான்கள், தெருக்கள், மர ஆலைகள், கடற்கரை, விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை மற்றும் மடுவம் போன்றவற்றின் பொதுச் சுகாதார நிலைகள் மற்றும் அவற்றின் மேம்பாடு தொடர்பிலும், தின்மக்கழிவகற்றல் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post