Breaking
Sun. Dec 7th, 2025

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசாங்கத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சிகள் விரும்பிய முடிவு எடுக்க உரிமையுள்ளது. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆழமாக ஆராய்ந்தது. அதிலுள்ள சில யோசனைகள் சிறந்தவை. சிலவற்றுக்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அவற்றை உடன் செய்ய முடியாது.

சில யாப்பு திருத்த செயற்பாடுகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவினூடாக முன்னெடுக்க வேண்டும். ஜாதிக ஹெல உறுமயவின் யோசனைகள் தொடர்பில் சில திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் தயாராகவே இருந்தது.

தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமன்றி சகல தரப்பையும் இணைத்து செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கம். ஜாதிக ஹெல உறுமயவின் முடிவினால் ஜனாதிபதியின் பலம் குறையாது. ஜனாதிபதி இதுவரை செய்த சேவையையும் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் பணிகளையும் மக்கள் நன்கு அறிவர்” என்றுள்ளார்.

Related Post