Breaking
Mon. Dec 15th, 2025

நேபாளத்தை இன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.

ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதி நாதர் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன.

Related Post