அஸ்ரப் ஏ சமத்
எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாண கச்சேரி மற்றும் 9ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஜனாதிதபதித் தேர்தலின்போது 70 வீதமான வடகிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்திருந்ததாகவும் அரசின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார்.
வட கிழக்குபிரதேசங்களில் வாழும் மக்களது தனியார் காணிகளை அங்கு நிலை கொண்டுள்ள படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும் இந்த மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துரையாடுவார்.
இந் நிகழ்வில் இம் மாகாணங்களது முதலமைச்சர்கள் மற்றும் பிரதேச அரசியல் பிரநிதிகள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்

