Breaking
Sat. Dec 6th, 2025

சத்தியக் கடதாசிகள் கையளிக்கப்பட்டதால் மாத்திரம் தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்லேகல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனக் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், மத்திய மாகாண சபையில் உள்ள 58 உறுப்பினர்களுள் 34 உறுப்பினர்கள் இணைந்து, மத்திய மாகாண புதிய முதலமைச்சராக திலினபண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரி சத்தியகடதாசியை கையளித்திருந்தனர்.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவிருப்பதாக, மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

Related Post