Breaking
Sat. Dec 6th, 2025

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலிக்கு, பதுரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கழகத் தலைவர் சாஜஹான் ஏகமனதாக இந்த அறிவிப்பை விடுத்தார். அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமது கழகம் பூரணமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்கள் பங்கேற்று உரையாற்றியதுடன்,  பிரதேச சபை உறுப்பினர் நெளபர், செயலாளர் முஸ்ஸம்மில் மற்றும் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் உட்பட  கழக உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post