பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலுள்ள கணனி விற்பணை நிலையத்தில் இன்று காலை பரவிய தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

