பம்மன்ன மக்கள் சந்திப்பும் எதிர்கால அபிவிருத்தி திட்டமிடல் கலந்துரையாடலும்!

கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன, ஹொரவதுன்னகம மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த 07 அன்று  அகில இலங்கை மக்கள் காங்கிஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான் மற்றும் பிரதேச இளைஞர்கள், கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

(ன)