Breaking
Sun. Dec 7th, 2025

திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் உள்ள கடலில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இன்று மதியம் 01.00 மணியளவில் குழந்தைகளுடன் கடலில் குதித்தவேளை மூவரும் கடற்படையினரால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது 12 வயதான சிறுமி மற்றும் 09 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ள நிலையில் தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.கற்பாறைகளின் மேலிருந்து கடலை பார்த்து கொண்டிருந்த போது மகன் தவறி விழுந்து விட்டதாகவும் அவரை காப்பாற்றுவதற்கு முயன்ற போதே மகளும் கடலுக்கு விழுந்துவிட்டதாக அந்த பெண், பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Post