Breaking
Sat. Dec 6th, 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2:30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன.
சம்பவத்தை அறிந்து இன்று காலை போலீசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பாயிஸிடமிருந்து முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கருதப்படுவதுடன் இன்று காலை கொழும்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் சில முக்கிய நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின்  முக்கிய  அரசியல் பிரமுகர்கள் சிலர் பாயிஸின் வீட்டிற்கு சென்று நிலைமைகளை அறிந்து கொண்டனர்.
ஏற்கனவே மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து அவர்   மயிரிழையில் உயிர்தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post