பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்த மக்கள் காங்கிரசின் தம்பலகாம மத்திய குழுவினர்!!!

திருகோணமலை மாவட்ட தம்டலகாமம் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்    இடம் பெற்றது.

மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள்.

விவசாய நன்னீர் மீன்பிடி தொடர்பான விடயங்களை இராஜாங்க அமைச்சர் அமீர் அலியிடம் முன்வைத்தார்கள்.

திருகோணமலை மாவட்டத்துக்கு விரைவில்  விஜயம் செய்யவுள்ளதாகவும்  கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் , விவசாய மீன்பிடி கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி , மத்திய குழு தலைவர் தாலிப் அலி, பிரதேச சபை உறுப்பினர் ரஜீன் உட்பட ஏனைய  மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்