Breaking
Fri. Dec 5th, 2025

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று (6)  75 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பை நடாத்தினர்.

இந்த சுற்றிவளைப்பின் போது 21 வர்த்தக நிலையங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் அகப்பட்டனர்.  மார்ச் மாதத்தில் இற்றைவரையில் 238 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 156 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அரிசியை எழுந்தமானமாக அதிகரித்து விற்றதை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக அதிகாரிகளைக்கொண்ட குழுவை பணியில் ஈடுபடுத்தி திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post