Breaking
Fri. Dec 5th, 2025

நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சில மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதன்படி அதிக தொகையினர் மேல் மாகாணத்தில் இருந்தே (13 பேர்) இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து எழுவரும் மத்திய மற்றும் வடமேல் மாகாணத்தில் இருந்து அறுவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

இதேவேளை தெற்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஐவரும் வடமத்திய மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் இம்முறை பாராளுமன்றம் செல்கின்றனர்.

Related Post