Breaking
Mon. Dec 8th, 2025

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மஜ்மா கிராமத்தில் செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத் திட்டத்தில் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பதில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கிராம சேவை அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத் திட்டத்தின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா கிராமத்தில் ஐம்பது வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளது.

இவ்வீட்டுத் திட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் மானியமாகவும், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மக்கள் பங்களிப்புடன் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மானிக்கப்படவுள்ளது.

Related Post