Breaking
Fri. Dec 5th, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்கள் வாழும் புளுக்கினாவெலி, கேவிலியாமடு, மங்கலகம, சின்னவத்தை ஆகிய கிராமத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி மூலம் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், மேலும் கேவிலியாமடு ஸ்ரீ சுகாத்தார விகாரதிபதி அரியமித்த, அமைச்சின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளுக்கினாவெலி கிராமத்தில் எட்டு இலட்சம் நிதி ஓதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டதுடன் கேவிலியாமடு கிராமத்தில் ஏழு இலட்சம் நிதி ஓதுக்கீட்டு மூலம் வீதி புனரமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட மங்கலகம கிராமத்தில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மங்கலகம கிராமத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கபட இருக்கும் வீட்டுத் திட்டத்திற்கான ஒதுக்கப்பட்ட இடத்தினை பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

மங்கலகம, மகியங்கனயால வீதிக்கு குறுக்காக அமைக்கப்படும் பாலத்தின் வேலைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நிதி போதாமையை கருத்தில் கொண்டு இதனை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்கள் பிரதியமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இதனை கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

Related Post