Breaking
Fri. Dec 5th, 2025

மக்கோனை ஸ்ரீ ஸம்புத்தராஜா வித்தியாலய அதிபரது வேண்டுகோளை ஏற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்று (04) பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இப்பாடசாலையானது 30% சிங்கள மாணவர்களையும் 70% முஸ்லிம் மாணவர்களையும் கொண்டியங்கக் கூடிய இந்தப் பாடசாலையில், நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி அதிபரால் ஹஸீப் மரிக்காரிடம் முன்வைக்கப்பட்டது. இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப், இது தொடர்பில் கலந்தாலோசித்து விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், பாடசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

(ன)

 

Related Post