Breaking
Fri. Dec 5th, 2025

தற் கொலை செய்வதை இறைவன் மன்னிப்பதில்லை” தற்கொலைதாரிகளை எமது மார்க்கமும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை  கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் முஸ்லீம் பிரிவினையையும் தெற்கில் சிங்களம் முஸ்லிம் மக்களை பிரித்து பிளவு படுத்த அத்ரலிய ரத்ன தேரர் முயற்சிக்கிறார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாட்டின் நாளா பாகமும் சந்தோசம் நிம்மதியினை பெற்று தந்த நல்லாட்சியை நாசகார கூட்டத்தினால் பங்காளிகளாக நின்றுகொொண்டு சமுகத்தின் சுதந்திரங்களை பரிக்க சிலர் எத்தணிக்கிறார்கள்.

பயங்கரவாத தாக்குதலையும் நடாத்தி விட்டு நாசகார வேலைகளை பார்த்தவர்களை ஒரு போதும் எம்மால் எமது மார்க்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சமுகத்தின் பாதுகாப்பு பொதுவாக நாட்டு நிலமைகளை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.முஸ்லிம்களின் இருப்புக்களை உறுதிப்படுத்த நாட்டின் ஜனாதிபதி பிரதம மந்திரி செயற்பட வேண்டும் அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் சாதாரணமாக இதனால் அவர்களுடைய குடும்பங்கள் பொருளாதார கஷ்டங்களை சுமப்பதுடன் உளரீதியான பாதிப்புக்களை எதிர் நோக்குகிறார்கள் இவ்வாறானவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Post