Breaking
Sun. Dec 7th, 2025

அஸ்ரப் ஏ சமத்

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அவா்கள் இன்று ஜனாதிபதி அழுலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா. மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சா்கள் சந்திப்பில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜி்த் பிரேமதாசாவை சந்தித்தாா்.

இச்சந்திப்பின்போது அமைச்சா் சஜித் இலங்கையில் மலையக, வட கிழக்கு மக்களுக்காக இந்திய வீடமைப்புத்திட்டங்களை அமைப்பது பற்றி வீடமைப்பு அமைச்சா் என்ற வகையில் பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்தாா்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் என்பதையும் இந்தியப் பிரதமா் நினைவில் வைத்திருந்து அவருடன் கலந்துரையாடினாா்.

அத்தருணத்தில் ஹம்பாந்தோட்டையிலும் நரேந்திர மோடி எழுச்சிக் கிரமாமம் ஒன்றை அமைக்கும் யோசனையும் அமைச்சா் சஜித் பிரேமதாச முன்வைத்தாக அமைச்சா் தெரிவித்தாா். இதற்கு பிரதமா் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சா் சஜித் தெரிவித்தாா்.

Related Post