புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி: இருவர் காயம்

புத்தளம் – புளிச்சாங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன  விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.