Breaking
Fri. Dec 5th, 2025

புத்தளம் முல்லை ஸ்கீம் கிராம பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும், கலை நிகழ்ச்சியும் இன்று (03) மாலை இடம்பெற்றது.  இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று விழாவை சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களான அனீஸ் ஜெரீஸா (மௌலவியா) மற்றும் மசூத் மஸாஹிமா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின்  புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீன், இணைப்பாளர்களான முஜாஹிர், ரிபாஸ் நஸீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Post