Breaking
Mon. Dec 15th, 2025

சவுதி அரேபியாவில் 13 ஆண்டுகளாக வேலை செய்த இலங்கை பணிப்பெண்னுக்கு கூலி கொடுக்காத எஜமானனுக்கு  68,000 சவுதி ரியால் அபராதமாக வழங்கும்படி சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-வாழ்க உயர் நீதிமன்றம்-

பேருவளை பகுதியை சேர்ந்த 59 வயது காதர் இஸ்மாயில் ஆசியா உம்மா என்ற பெண்ணுக்கே இவ்வாறு 13 ஆண்டுகளாக வேலைக்கு சம்பளம் கிடைக்கவில்லை. 

அவரின் எஜமானருக்கு 68,000 சவுதி ரியால் அபராதமாகவும்  குறிப்பிட்ட பெண்ணின் கொழும்பு விமான  டிக்கட் கட்டணங்களை கொடுத்து அவரை இலங்கை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன்,  பெண்கள் நலத்துறை முகாம் ஒன்றில் தங்கி இருக்கிறார்.

 இலங்கை பேருவலையை சேர்ந்த இவர்  SR400 ஒரு மாத ஊதியம் மட்டுமே கொடுக்கபட்டுள்ளது..

2014 ல் அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்க தூதரகம் வந்த போதே இதுபற்றி தெரிய வந்து எஜமானருக்கு எதிரான  விசாரணைகள் ஆரம்பமயுள்ளது.

Related Post