Breaking
Fri. Dec 5th, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு ஜுன் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது.

இதன்படி, அனுராதபுரம் மத்திய மாகாண வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர கல்லூரி, சாஹிரா கல்லூரி (அநுராதபுரம்), மிஹிந்தல மகா வித்தியாலயம், தந்திரமலை ஞானவிமலா வித்தியாலயம் நிவன்த-கச்சதிய கல்லூரி, சுவர்ணபாலி மகளிர் கல்லூரி, ஸ்ராவஸ்திபுர திஸ்ஸ மற்றும் தேவாநம்பியதிஸ்ஸபுர வித்தியாலயம், உட்பட 12 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post