Breaking
Sun. Dec 7th, 2025

ஏற்கனவே மாதுலுவாவே சோபித தேரரின் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் தாம் எப்போதும் நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாக எந்தக் கட்சியும் பொதுமக்களும் விரும்பினால் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயார் என்று அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலைக்கு தகுதியானவன் என்று கருதினால் தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தாம்  ஒருபோதும் பதவிக்காக பணியாற்றியதில்லை. நாட்டை பாதுகாக்கும் விடயங்களையே முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருந்தாலும் தற்போது நாட்டுக்கு பொதுவான தேவையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே என்று ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related Post