Breaking
Fri. Dec 5th, 2025
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக, நாளை (04) வியாழக்கிழமை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் போராட்டத்திற்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அழைப்பு விடுத்துள்ளார்.
 
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு, முஸ்லிம் சமுகமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஊடக அறிக்கையை விடுத்துள்ள போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
 
அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்தமயமாக்கல், நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்தப் போராட்டம் நடைபெருகின்றது.
 
எனவே, இதற்கு எமது மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும். இது சிறுபான்மை சமூகத்திற்கான உரிமைக்கான போராட்டம். அனைவரும் இன ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று தெரிவிததுள்ளார்.

Related Post