Breaking
Sun. Dec 7th, 2025

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார்.

பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 324 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் வர்த்தக மையம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வர்த்தக மையத்தின் இடத்திற்கு சென்ற பிரதியமைச்சர் கட்டுமானப் பணிகள் தொடர்பாக பொலநறுவை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித ஆரியரத்ன மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

Related Post