Breaking
Sat. Dec 13th, 2025

ஆளும் கட்சியின் பௌத்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு இணைந்து செயற்படவுள்ளனர்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புத்திஜீவிகளும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

மாநாயக்க தேரர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சாசன அமைச்சின் ஒத்துழைப்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Post