மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்

இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ள ஜனாதிபதி, அதனையடுத்து அநுராதபுர நகரில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கவுள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.