Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம் பெற்றது.

நள்ளிரவு வரை தொடர்ந்த கூட்டத்தில், அ.இ.ம.கா பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற, முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்கள் பற்றியும் அலாவப்பட்டன. எதிர்நோக்கும் தேர்தல்களில் முசர்ரப் இன் பக்கம் பலமாகத் திரண்டெழுந்து அவரை பலப்படுத்துவதாக அனைவராலும் முன்மொழியப்பட்டது.

கவிஞரும் ஓய்வுபெற்ற மூத்த ஆசானுமாகிய முகம்மத் மாஸ்டர் அவர்கள் தனது உரையின் போது “உன் தரிசனம் கண்ட பின் பொத்துவில் அரசியல் புனிதம் கொண்டது” என புகழாரம் சூட்டியது அனைவரையும் நெகிழ்வூட்டியது.

கூட்டத்தின் இறுதி அங்கமாக காரசாரமான கேள்வி பதில்களும் பகரப்பட்டமை விஷேட அம்சமாகும்.

Related Post