Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான மத்திய குழு தெரிவு அறிவித்தல் வழங்கப்பட்டதன் படி கடந்த வெள்ளிக்கிழமை (03-08-2018) பி.ப 7.00 மணியளவில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு அக்கரைப்பற்று பட்டின பள்ளி வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்11ம் வட்டார செயற்பாட்டுக் காரியாலயத்தில் அதன் முதற்செயற்பாட்டு நிகழ்வாக இடம் பெற்றது.

அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான 2018 நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவும் இங்கு நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான மத்திய குழுவின் நடப்பு வருட உத்தியோகத்தர்களாக பின் வருவோர் தெரிவு செய்யபட்டனர்.

தலைவர்- அஷ்ஷெய்க் எஸ். எல். எம் ஹனீபா மதனி

உப தலைவர்- அல் ஹாஜ் எம்.எம் ஜலால்தீன் CC

செயலாளர்- எஸ்.எல் ஹம்தூன்

பொருளாளர்- எம்.ஐ.எம் நிர்பான் ஹாஜி

செயலாளர், கொள்கை பரப்பு- ஏ.ஜீ.எம். தௌபீக் ஊடகவியலாளர்.

உப செயலாளர்- அல் ஹாஜ் எம்.ஜீ.எம் இத்ரீஸ்

இணைப்பாளர், இளைஞர் விவகாரம்- எம்.ஏ அஸ்மத்( லோட்ஸ் போய்ஸ் விளையாட்டு கழக தலைவர்)

செயலாளர், கல்வி கலாசாரம்- எம்.ஏ றம்ஸான்

இணைப்பாளர், தொழிற்சங்கம்- அல் ஹாஜ் யூ.கே.எம். அபூபக்கர்

இணைப்பாளர், விவசாயம் மீன்பிடி- யூ.எல்.ஏ. றஸ்ஸாக்

இணைப்பாளர், மகளிர் விவகாரம்- சித்தி பஷீறா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

(ன)

Related Post