மக்கள் காங்கிரஸின் அக்குரனை, நீரல்லை கிளை அங்குரார்ப்பணம்!

கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபைக்குட்பட்ட நீரல்லை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  புதிய கிளை அங்குரார்ப்பண நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் கடந்த வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை கிளையின் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஜேபி உட்டப ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.