மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் வரிப்பத்தன்சேனை பகுதியில் பணிகளை ஆரம்பித்தார்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர்,  ஊரின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள், கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஊர்ப் பிரமுகர்களுடன்  கலந்தாலோசித்தார்.

அத்துடன் இறக்காமம் பிரதேசபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானத்துக்குச் சென்று பார்வையிட்ட அவர், மைதானத்தை செப்பனிடல், சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளைக் கண்டறிந்துஅதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் மின்விளக்குகள் அற்ற பாதைகளைக் கண்டறிந்து, அந்த வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.