மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்புக்கான கூட்டம்!

-எப்.சனூன்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்பின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் நேற்று மாலை (12)  இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸின் தலைமையில், கொழும்பு மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மகளிர் கலந்துகொண்டனர்.

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.