Breaking
Sat. Dec 6th, 2025

மு.கா பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அடாவடித்தனம் தொடர்ந்தேர்ச்சியாக சம்மாந்துறையில் அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், சம்மாந்துறையில் இன்று (09) சின்னப்பள்ளி வட்டாரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் தற்சமயம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக எந்தவித முறையான சிகிச்சையும் அளிக்கப்படாமல் ஆறாம் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலை நிர்வாகத்திலும் அரசியல் பின்புலத்தில் உரிய சிகிச்சை வழங்கக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியதே.

இவ்வாறான அரசியல் கலாச்சாரம் எமது மண்ணிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். நல்லாட்சியும் நிறுவப்பட வேண்டும்.

 

 

Related Post