Breaking
Fri. Dec 5th, 2025
06 மாத கால ஜனநாயக விரோத சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆதரவாளர்கள், அபிமானிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை கடந்தவாரம் முதல் சந்தித்து வருகின்றார்.
 
அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை (05) குருநாகல், கெகுணகொல்ல பகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
 
மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினருமான நஸீரின் இல்லத்தில் குறித்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதன்போது, ஆதரவாளர்களும், கட்சித் தொண்டர்களும், முக்கியஸ்தர்களும் தலைவர் ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி சுகம் விசாரித்தனர். இந்த சந்திப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் பலரும் பங்கேற்று தலைவருடன் அளவளாவினர்.
 
இதேவேளை, தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
 
 
 
 
 

Related Post