மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் இன்று மன்னார் விஜயம் – விடுதலைக்காகப் பிரார்த்தித்த மக்களுக்கும் நன்றி தெரிவிப்பு!

மன்னாருக்கு இன்று காலை (29) விஜயம் மேற்கொண்ட மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மாவட்டத்தின் தலைமன்னார், சவுத்பார், சாந்திபுரம், பெட்டா, பள்ளிமுனை, உப்புக்குளம் மற்றும் மூர் வீதி ஆகிய பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அத்துடன், தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த மக்களுக்கு  நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.