மக்கள் காங்கிரஸ் மகளிர் அணியின் விழிப்பூட்டல் கருத்தரங்கு!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள்  காங்கிரஸின் மகளிரணியூடாக பெண்களுக்கான மருத்துவக்  கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வு நீா்கொழும்பு சய்பா காடின் ஹொட்டலில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை, நீா்கொழும்பு மகளிரணி மற்றும் நீா்கொழும்பு மாநகர சபைத்தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.